தவறை ஒப்புக்கொண்டார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்!
வரும் காலங்களில் இது போல தகவல் திருட்டை ஃபேஸ்புக் சகித்துக்கொள்ளாது. பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் கடமை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு உண்டு
கடந்த மார்ச் 19-ம் தேதி அன்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் "கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஃபேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி, டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவி செய்ததாக செய்தி வெளியிட்டது. இந்த செய்தியால் உலக முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பல சிக்கல்கள் உருவாகியுள்ளன.
இந்த குற்றச்சாற்று மூலம் ஒரே நாளில் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் லாபம் பல மில்லியன் அளவில் குறைந்ததாகக் கூறப்படுகிறது. அந்நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.
இச்சம்பவம் குறித்து இங்கிலாந்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் வரும் 26-ம் தேதிக்குள் முகநூல் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா முறைகேடு விவகாரத்தில் தவறுகள் செய்திருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ள சூகர்பெர்க்,
“தவறு நடந்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். வரும் காலங்களில் இது போல தகவல் திருட்டை ஃபேஸ்புக் சகித்துக்கொள்ளாது. பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் கடமை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு உண்டு, அதை செய்ய முடியாவிட்டால் மக்களுக்கு சேவையாற்றும் தகுதி தங்களுக்கு இல்லை
கேம்பிரிட்ஜ் அனலடிகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகளை ஃபேஸ்புக் நிறுவனம் தணிக்கை செய்யும். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம். இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டது”. என்று தெரிவித்துள்ளார்.